தேங்காய் சட்னி

தேங்காய் சட்னி

சட்னினா சும்மா தேங்காய் பொரி கடலை பச்சை மிளகாய் உப்பு எல்லாத்தையும் போட்டு மிக்ஸில அடிக்கிறதுனு நினைச்சீங்களா !!! சட்னிடா.

சும்மா பேரை கேட்டாலே அதிருதில்ல. அதுக்குனு ஒரு வரிசை வகை எல்லாம் இருக்கு.

முதலில் ரொம்ப முத்தலாகவும் ரொம்ப இளசாவும் இல்லாமல் இருக்கும் தேங்காய் பார்த்து வாங்கவும். முத்தல் தேங்காய் தேங்காய் பாலுக்கு தான் சிறந்த்து சட்னிக்கு அல்ல.

தேங்காய் தண்ணியை மடக்குனு குடிச்சிட கூடாது. எடுத்து வைங்க அப்புறம் சொல்றேன்.

தேங்காயை முதலில் 5 நிமிஷம் தண்ணீரில் போட்டு வைங்க அப்பத்தான் சரியா உடையும் இல்லேனா கோணல் மாணலா உடையும் அப்புறம் சில்லு எடுக்கும் போது கையை குத்தும். அதான் பெரியவங்க சாமிக்கு தேங்காய் உடைக்கும் முன் தண்ணீரில் கழுவுவாங்க கோணல் மாணலா உடைஞ்சி மனசு கோணக்கூடாதுல !!!

தேங்காய் உடைத்தது துருவிக்கொள்ளவும் துருவிய தேங்காயில் செய்தால் அதிக ருசி. சில்லாக எடுத்தால் சின்ன சின்ன துண்டுகளாய் வெட்டி வச்சுக்கோங்க. தேவையானது போக மிச்சத்தை ஒரு டைட் பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு ஃப்ரீஸர்ல வச்சிட்டா அப்போ அப்போ எடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்து பொரிகடலை நல்ல நாட்டு பொரிகடலை வாங்குங்க. வாங்கும் முன் கொஞ்சம் நல்லா இருக்கானு சாப்பிட்டு பாத்து வாங்குங்க. பெருசா நல்ல கலரா இருக்கிறதெல்லாம் சல்ஃபர் போட்டு வெளுக்க வச்சது அது வாங்காதீங்க. ருசிக்காது

அடுத்து பச்சை மிளகாய் நல்ல காரமாய் இருக்கும் மிளகாயா பார்த்து வாங்குங்க. பிச்சி முகர்ந்து பார்த்தால் கத்தரிக்கா வாசம் வரப்படாது.

அடுத்து வெள்ளைபூண்டு நல்ல ஒருப்பூண்டா வாங்கனும் அல்லது ரசப்பூண்டு வாங்கவும். சைனா பூண்டு தவிற்க்கவும்

அம்மியில் ……………………..……… சரி சரி வேண்டாம்

மிக்ஸியில் முதலில் பூண்டு (2 சில்லுக்கு ஒரு பூண்டு 2 பச்சை மிளகாய் ) பச்சை மிளகாய் உப்பு போட்டு 5 செகண்ட் மிக்ஸியில் அரைக்கவும். அடுத்து தேங்காய் போட்டு முக்கால் வாசி அடிபடும் வரை அரைக்கவும். அடுத்து பொரிகலை போட்டு அரைக்கவும். உப்பு சரி பார்க்கவும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வைத்த தேங்காய் தண்ணீர் விட்டு அரைத்து தேவையான கெட்டி பதத்தில் நிறுத்தி உடனே ஓரு கிண்ணத்தில் மாற்றவும். மையா அடிக்க கூடாது.

அடுத்து கடுகு உளுந்தம் பருப்பு தாளிதம் பண்ணி கறி வேப்பிலை ஒரு வத்தல் கிள்ளிப்போட்டு போட்டு அடுத்து ஒரு சாம்பார் வெங்காயம் சின்னதா நறுக்கி போட்டு சிவந்ததும் சட்னியில் சேர்க்கவும்.

ஒரு கை வதக்கிய கறிவேப்பிலை சேர்த்து அரைச்சா கம கமனு வாசமான கறிவேப்பிலை சட்னி ரெடியாகும்.

பச்சை மிளகாய்க்கு பதில் மிளகாய் வத்தலும் போடலாம்.

செஞ்சி பார்த்து சொல்லுங்க சுவை எப்படினு

 

 

Print Recipe
தேங்காய் சட்னி
Servings
Ingredients
Servings
Ingredients
Share this Recipe
Powered by WP Ultimate Recipe

Post Your Comment Here